தீராத தாகம் – கவிதை நூல் வெளியீடு

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி. குணரத்தினம் கமலகுமார் தலைமையில் தமிழ் மன்ற போசகர் திருமதி. பத்மா ஜெயச்சந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ் மன்ற ஆலோசகர்களான திரு. இ.சந்திரசேனா, திரு.த. ஜீவராஜா, திரு. இரா சுரேஸ்குமார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 2026/06/10 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இரண்டாம் வருட மாணவன்  திரு. J.M. வலீத் அவர்கள் எழுதிய தீராத தாகம் கவிதை நூல் வெளியிடப்பட்டது. பிரதம விருந்தினராக திரு.S.A.C.ஹிதாயதுல்லா வடமத்திய மாகாண ஆசிரிய ஆலோசகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக வட மத்திய மாகாண தமிழ்ப் பிரிவு பணிப்பாளர் திரு .S.M.சியாத் அவர்களும் கலந்து கொண்டனர்.

நூல் ஆய்வினை புளியங்குளம்  வாண்மைத்துவ நிலைய முகாமையாளர் திரு. சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these