வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Grand Ifthar- 2026” நிகழ்வு கடந்த புதன்கிழமை(11-03-2026) சிறப்பாக நடைபெற்றது. விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் குர்ஆன் ஓதல் இடம் பெற்றது. அதன் பின்னர் வரவேற்புரை, தலைமையுரை, போசகர் உரை, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை இடம் பெற்றது. மேலும் இஸ்லாமிய பாடல், கவிதை தொகுப்பு போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்நிகழ்வின் போது பீடாதிபதி, கல்விப் பிரதியமைச்சர் Dr. மதுர செனவிரத்ன, வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் முன்னாள் அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. I.முத்து முஹம்மது அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் SM.Shibly (Meezani, President, ACJU, Vavuniya), ACJ.Aabtheen (President, Mathina Masjid), Ash – Sheikh EL.Ratheem (Meezani, Secretary, ACJU, Vavuniya Pattanichchoor Branch), AT.Aslam Mohammed அவர்களும் உபபீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து சூரியன் மறையும் நேரத்தில் அதான் ஒலியுடன் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்து இப்தார் உணவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வு அனைவரிடமும் நல்ல ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பகிர்ந்துண்ணும் உணர்வை வளர்க்கும் ஒரு சிறப்பான தருணமாக அமையப் பெற்றது சிறப்புக்குரியதாகும்.














