President's Speech

Mr.G.Kamalakumar (Phd,Mphil, PGDEM, MATE, BA, Dip in Eng)

பீடாதிபதியின் வருடாந்த அறிக்கை -2025 வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி என்ற வகையில் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் . 2025ஆம் ஆண்டில் எமது கல்லூரியானது பல்வேறுபட்ட சோதனைகளைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.

கல்லூரியின் பீடாதிபதி என்ற வகையில் கல்லூரி வளர்ச்சிக்கும் ஆசிரிய பயிலுநரின் தொழில் வாண்மை மற்றும் ஆளுமை விருத்திக்கும் கல்விசார் கல்விசார ஊழியரின் வெற்றிகளுக்கும் உடல் ஆளுமை ஆரோக்கியத்தையும் தந்த இறைவனுக்கு நன்றிகளைக்கூறி இவ்வருட அறிக்கையினைச் சமர்ப்பிக்கின்றேன்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளது தூரநோக்கு பணிக்கூற்று நோக்கங்கள் என்பன பின்வருமாறு அமைகின்றன.

தூரநோக்கு

உலக முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வாண்மைத்திறன் நிறைந்த ஓர் ஆசிரியரை சேவை முன்பயிற்சி மற்றும் தொடருறு கல்வி அபிவிருத்தி மூலம் உருவாக்குதல்

பணிக்கூற்று

பீடாதிபதி. உப்பீடாதிபதிகள், கல்வியியலாளர்கள் மற்றும் கல்விசாராப் பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும். உறுதியுடனும். கல்லூரிச் சமூகமாக ஒன்றிணைந்து எமது தேசத்திற்கான உயர்வான எண்ணங்களுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்குவோம்.

தேசிய கல்வியியற் கல்லூரியின் நோக்கங்கள்
  • சிறந்த நடத்தைகளைக் கொண்ட தனது பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைப் பற்றிய சிறப்புத் தேர்ச்சியுள்ள எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளப் பொருத்தமான ஆசிரியர்களை பாடசாலைச் சமூகத்திற்கு வழங்குதல்.
  • தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அருகிலமைந்துள்ள பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்தலும் நடைமுறைப்படுத்தலும்.
  • கல்வி ஆய்வுகள் நடாத்துதலும் அவ்வெளியீடுகளைப் பயன்படுத்துவதன் ஊடாக கல்வியின் பண்புத்தரத்தை விருத்தி செய்தல்.
  • துறைசார் வெளியீடுகளைத் தயாரித்தலும் அவற்றை வெளியிடுவதும்.
  • மக்களுடன் சாதகமான தொடர்பு கொள்ளுதலும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுதலும்,
  • சகல ஆசிரியர்களினதும் தொழில்வாண்மை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தொடருறு ஆசிரியர்கல்வி வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்தல், கல்வியியலாளர்களை வளவாளர் களாக ஈடுபடுத்துதல்.
  • ஆசிரியர் கல்வியியலாளர்களுக்கு இடையில் அந்நியோன்ய நட்புறவை விருத்தி செய்வத மூலம் சிறந்த கலவிச்சந்தர்ப்பங்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பங்களை வழங்குதல்.
  • விளைதிறன் மிக்க ஆசிரியர் கல்விக்காக கல்விசார். கல்விசாரா உதவிப் பணியாளர்களை ஒரு கல்விசாரா நிறுவனக்கட்டமைப்புக்குள் வினைதிறனுடையவர்களாக உருவாக்க திரை முகப்படுத்தல்.
  • எதிர்கால உலகத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய கல்வித் தொழில்நுட்பத் திறன்மிக்க, சுயகற்றவில் ஈடுபடும் ஆசிரியர்களை உருவாக்குதல்.
  • சமூகப்பல்வகைமையைப் புரிந்து கொள்வதன் ஊடாக தேசிய இணக்கப்பாட்டையம் சகவாழ்வையும் விருத்தி செய்தல் என்பனவாகும்.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தூரநோக்கு பணிக்கூற்று பின்வருமாறு அமைகின்றது.

தூரநோக்கு

உயர்வான எண்ணங்களுடன் கூடிய கௌரவமான வாண்மைத்துவம் மிக்க ஆசிரிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.

பணிக்கூற்று

எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு தேவையான வினைத்திறன் ஊக்கம் ஆராய்வு நாட்டம் கொண்ட தேசிய கல்வி நோக்கங்களை பூரணப்படுத்துவதற்கு இயலுமான தொழில் தேர்ச்சிகளை மற்றும் அர்ப்பணிப்புக் கொண்ட ஓர் ஆசிரியரை பாடசாலைக்கு வழங்கல்

மேற்கண்டவாறு அமையும் தேசிய கல்வியியற் கல்லூரிகளது தூரநோக்கு, பணிக்கூற்று நோக்கங்கள் என்பவற்றின் அடிப்படையிலும், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தூரநோக்கு பணிக்கூற்று அடிப்படையிலும் எமது செயற்பாடுகள் அணியாக முன்னெடுக்கப்ப டுகின்றன.

கல்விசார் உத்தியோகத்தர்கள்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உயிரோட்டமான இயக்கத்திற்கு இதய நாதமாக இருப்பவர்கள் கல்விசார் பணியாளர்கள் ஆவர். 69 கல்விசார் பணியாளர்களைக் கொண்டு எமது கல்லூரி தரமான சேவையை வழங்குகிறது. தரமான ஆசிரியர் கல்வி என்பது தரமான ஆசிரிய கல்வியியலாளர்களின் பணியாக அமைகின்றது. வகுப்பறைச் செயற்பாடுகளிலும் ஆய்வுகள், செயற்றிட்டங்களில் ஆசிரிய மாணவர்களை ஈடுபடுத்துவதிலும் எமது ஆசிரிய கல்வியியலாளர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றனர். இணைப்பாடவிதான செயற்பாடுகளை திட்டமிட்டு முறைப்படுத்துவதிலும் கல்வித்தரமேம்பாடு, நிதிநிர்வாக செயற்பாடுகள் என்பவற்றில், பங்களிப்புப் செய்வதிலும் ஆசிரிய கல்வியியலாளர்கள் ஈடுபடுகின்றார்கள். கட்டுறுப்பயில்வு மேற்பார்வை, கணிப்பீடுகளை நடாத்துதல், கற்பித்தல் பயிற்சி மேற்பார்வை மாணவ ஆசிரியர்களின் நலன்புரி விடயங்கள் என்பவற்றிலும் சிறப்பாக தமது கடமைகளை ஆற்றுகின்றனர்.

மேலும் 05.07.2025 இல 51 புதிய ஆசிரிய கல்வியியலாளர்களும், இடமாற்றம் பெற்று மூன்று ஆசிரியகல்வியியலாளர்களும் எமது பணிக்குழுவில் இணைந்தனர். எனினும் அரசியல் தலையீடு மற்றும் சேவைக்காலம் என்பவற்றின் கீழ் பழைய ஆசிரிய கல்வியியலாளர்கள் 13 பேரும் புதிய ஆசிரிய கல்வியியலாளர்கள் 7 பேரும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர இதில் கவலைக்குரிய விடயமாக மேலும் 15 பேர இணைப்பில் சென்றுள்ளனர் எனினும் தற்போது 53 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் கல்விசார் செயற்பாடுகள் இணைப்பாட செயற்பாடுகளின் தரம் அக்கறை மிக்கதோர் அர்ப்பணிப்பான கல்வியியலாளர்களின் பூரண ஒத்துழைப்பினாலேயே சாத்தியமாயிற்று. போதிபதி என்ற வகையில் மாணவ ஆசிரியர்களின் நலனில் அக்கறையுடன் செயலாற்றும் அனைத்து ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

கல்விசாரா உத்தியோகத்தர்கள்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உயிரோட்டத்துக்கு அடித்தளமாக அமையும் மற்றொரு தொகுதியினர் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆவார். எம்முடன் இதுவரை பணியாளர் மூவர் இணைந்துள்ளனார். இவர்களில் இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனார். மேலும் ஒருவர் தொடர் பணியில் உள்ளார். உத்தியோகத்தர்க ளுக்கான பணிவெற்றிடம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் ஏனைய பணிக்கமை அதிகரித்துள்ள போதும் சோர்வடையாமல் தமது பணியினை நிறைவேற்றுகின்றனர். எமது கல்விசாராப் பணியாளர்களது சேவை மனப்பாங்கு போற்றப்படுகின்றது.

கல்விசாரா ஊழியர்கள் விடயத்தில் அரசியல் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் எமது கல்லூரியில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற இரு காவலாளிக்குப் பதிலாக எவரும் நியமிக்கப்படவில்லை. அதில் ஒருவருக்கு கல்வி அமைச்சின் செயலாளரினால் ஆறு மாதங்கள் நீடித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியுள்ளது. புதிய முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. எனவே கல்விசாரா செயற்பாடுகள் மேலும் இடர்பாட்டுக்குள் சென்று கொண்டு இருக்கின்றன.

பதிவாளர் திரு.க.சுகுமார் அவர்கள் தமது பணிகளைச் செவ்வனே செய்து கல்விசாராப் பணியாளர்களை ஒருங்கிணைப்பதில் பெரிதும் உதவுகிறார். அவருக்கும் அவரின் அணியினருக்கும் எமது பாராட்டுகள்.

"மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே
உண்மையான கல்வி.”